கோயம்பேடு, திருச்சி காய்கறி அங்காடிகளை திறக்க நடவடிக்கை

கோயம்பேடு, திருச்சி காய்கறி அங்காடிகளை திறக்க நடவடிக்கை

விரைவில் கோயம்பேடு, திருச்சி காய்கறி விற்பனை அங்காடிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் கூறியதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மூடியிருக்கும் கோயம்பேடு, திருச்சி மற்றும் பல்வேறு காய்கறி விற்பனை அங்காடிகளை திறக்க தமிழக அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பின் பேரில் தலைமைச்செயலகம் வந்து அவரைச் சந்தித்ததாகவும் மேலும் தங்களுடையக் கோரிக்கைகளை ஏற்று விரைவில் தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை அறிவிப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.