கோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க!

கோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட் மூட வேண்டும் என்று மனித உரிமைகள் கழக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

 • மதுரை திருமங்கலம் டோல்கேட்டில் மனித உரிமைகள் கழகத்தினர் அதன் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் தலைமையில் ஆய்வு செய்தபோது, அங்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக உள்ளூர்வாசிகளிடமும் அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும்
  கண்டறிந்தனர்.
 • இதையடுத்து அதிரடியாக டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து மனித உரிமைகள் கழக தலைவர் டாக்டர் எஸ்.சுரேஷ் கண்ணன் கூறுகையில்,
  இந்த டோல்கேட் அதிக கட்டணம் வசூல் செய்வதை நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நீதிமன்றமே டோல்கேட் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்றும், கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும் என்று
  கூறி யுள்ளது, மேலும்
  நீதிமன்றம் கண்டமும் தெரிவித்துள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத இந்த மதுரை -திருமங்கலம் டோல்கேட்டை மூட வேண்டும் என மனித உரிமை கழகம் வலியுறுத்துவதாகவும் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் தெரிவித்தார்.
  மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்குமாரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதற்கும், உள்ளூர்வாசிகளிடம் சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்வதையும், 85 ரூபாய் என அதிகளவில் கட்டணம் வசூல் செய்வதையும் என டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்து
  மறியல் செய்யபட்டதாகவும், மனித உரிமை கழக தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் தெரிவித்தார். மேலும் காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடபட்டுள்ளது. இதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் ஆதரவு தெரிவித்தனர்.