`3 நாட்கள் அனுமதி!’ -5 காவலர்களை தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சிபிஐ?

`3 நாட்கள் அனுமதி!’ -5 காவலர்களை தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சிபிஐ?

[சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் தர் உள்பட 5 போலீசாருக்கு நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்ஐ-க்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ், காவலர்கள் மருகன், முத்துராஜையும் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. முன்னதாக விசாரணை செய்த தமிழக சி.பி.சி.ஐ.டி., ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உட்பட 10 பேரைக் கைது செய்தது. தொடர்ந்து, விசாரணையை கையில் எடுத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ விசாரணைக் குழு, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கினை 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது.

கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்துவந்தனர். இதற்கிடையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அதனை அறிந்த சி.பி.ஐ அதிகாரிகள், அவசர அவசரமாக மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில், ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை நேற்று மாலையே வாபஸ் பெற்றார் ஆய்வாளர் ஸ்ரீதர். இதற்கிடையில், சி.பி.ஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று காலை விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹேமானந்தகுமார் விசாரித்தார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐவரும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்துபேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ய முடிவெடுத்திருப்பதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்குச் செல்ல சம்மதமா என ஆஜர் செய்யப்பட்ட ஐவரிடமும் தனித்தனியாக கேட்டிருக்கிறார் நீதிபதி. அதற்கு ஐவரும் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐவரும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்குச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து மூன்று நாட்கள் சி.பி.ஐ விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

ஐவரையும், தூத்துக்குடி அழைத்துச் சென்று விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.