மத ரீதியிலான மோதலை தூண்டுவதாக இணையதள சேனல் மீது வழக்குப்பதிவு!

மத ரீதியிலான மோதலை தூண்டுவதாக இணையதள சேனல் மீது வழக்குப்பதிவு!

கருப்பர் கூட்டம்” என்ற youtube சேனலை தடை செய்யக்கோரி, பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளைஆபாசமாக பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில்,அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, மாநகர காவல் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருப்பர் கூட்டம் இணைய தள சேனல் மீது சாதி, மத, இன- மொழி ரீதியான மோதலை தூண்டுவதாக  5 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.