கடலூரில் மீண்டும் கொரோனா கெடுபிடி!

கடலூரில் மீண்டும் கொரோனா கெடுபிடி!

கடலூர், 18.06.21:

கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடலூரில் கட்டுப்பாடுகளை இன்னும் இறுக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி, காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

வரும் சனிக்கிழமை முதல் 30ம் தேதி வரை இந்த கடை திறப்பு நேர குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக வணிகர்கள், ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.