அறந்தாங்கியில் கொரோனா நிவாரணம் தாராளம்

அறந்தாங்கியில் கொரோனா நிவாரணம் தாராளம்

புதுக்கோட்டை, 17.05.30:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் துப்புரவு மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு முன்னாள் சேர்மன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் ஆவுடையார்கோயில் நகரை துாய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ராஜேஸ்வரி நரேந்திரஜோதி தலைமை வகித்து பொருட்களை வழங்கினார்.

ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்

முன்னாள் கவுன்சிலர் நரேந்திரஜோதி, தாசில்தார் மார்டின் லுாதர்கிங், வர்த்தக சங்க தலைவர் முத்துகருப்பையா, ஊராட்சி தலைவர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் துணை தாசில்தார் ஜபருல்லா, ஊராட்சிதலைவர்கள் திருப்பெருந்துரை சந்திரா, பூவலுார் சரவணபெருமாள், குன்னுார் காளிமுத்து, காசாவயல் கூட்டுறவு சங்க தலைவர் சொர்ணகருப்பையா, ஊராட்சி துணை தலைவர் பிரியா, முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாஜக

பாஜக சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி நகர தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கி துணை தலைவர் முரளிதரன், பாஜக துணை தலைவர் காடப்பன், மகளிரணி கவிதா, மாவட்ட செயற்குழு ஜெயபாண்டியன், பொதுசெயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவும் பாஜக

இந்த நிகழ்வில் 300 பேருக்கு தலா ரூ.500 மதிப்பிலான பொருட்களை மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாமரைசெல்வன், மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன், சரஸ்வதி, ரங்கையன், அய்யப்பன் முருகன், மனோகரன், மணிகண்டன், பிரபாகரன், கார்த்திகேயன், உமா, கனிமொழி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.