கொரோனா பகுதியில் இறந்த பிராமணரை ஒதுக்கிய உறவுகள்: தூக்கிச் சுமந்த மனிதர்கள்!

கொரோனா பகுதியில் இறந்த பிராமணரை ஒதுக்கிய உறவுகள்: தூக்கிச் சுமந்த மனிதர்கள்!

ரேணிகுண்டா, 17.05.20:
ஆந்திரா ரேணிகுண்டாவில் பிராமணர் இறந்து விட்டார் முஸ்லீம்கள் பாடை சுமந்தனர் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நகரில்
‘கொரோனா ரெட் ஜோன்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியில், முதுமை காரணமாக பிராமண சமூகத்தைச் சார்ந்த பெரியவர் ஒருவர் இறந்தார்.
அந்தப் பகுதி சிவப்பு குறியீட்டு (ரெட் ஸோன்) மண்டலத்தில் வருவதால், இறந்தவர் உடலை செய்யவோ, இறுதிக்கடன் செலுத்தவோ உறவினர்கள் உட்பட யாருமே முன்வரவில்லை.

இந்நிலையில், இதையறிந்ததும் அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் கலங்கினர்.
உடனே, செயலில் இறங்கி, இறந்தவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
அத்துடன், அந்த முதியவர் மரணத்தை தங்கள் வீட்டு துக்கமாக கருதி காரியத்தில் ஈடுபடார்கள்.

ரம்ஜான் நோன்பு களைப்பில் இருந்தாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இறந்தவருக்கான இறுதிக் காரியங்கள் அனைத்தையும் உடன் இருந்து செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து, இறந்த பிராமணர் உடலை தங்களுடைய தோள்களில் சுமந்து இந்துக்களின் மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு நல்லடக்கம் செய்து விட்டு ஊர் திரும்பினர். இந்த மனித நேயம் மிக்க செயல் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் அன்பையும், மனிதத்தையும் வைரலாக பரப்பி வருகிறது.