இலங்கை சொந்தங்களுக்கு கொரோனா நிவாரணம்: கொடுத்தது அனுமன் டிரஸ்ட்!

இலங்கை சொந்தங்களுக்கு கொரோனா நிவாரணம்: கொடுத்தது அனுமன் டிரஸ்ட்!

புதுக்கோட்டை, 08.05.20:
அறந்தாங்கி அருகே அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் ராமபக்த அனுமன் டிரஸ்ட் சார்பில், கொரோனா நிவாரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் உள்ளது அழியாநிலை. இங்கு இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிக்கும் 261 குடும்பத்தினரும் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ளனர்.

இதையடுத்து, இந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் கொரோனா நிதியை அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ராமபக்த அனுமன் சேவா டிரஸ்ட் சார்பில் அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமார் வழங்கினார்.

அப்போது, சேவா டிரஸ்ட் பொருளாளர் ரவிக்குமார் துணை தாசில்தார் விஜயலட்சுமி, சரவணன், ராஜேஸ்கண்ணன், லட்சுமிபதி, அன்னதான தொண்டர்கள் சுப்புராமன், காளிமுத்து, விஸ்வநாதன், மாணிக்கவாசகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
நிவாரணம் வழங்கிய போது, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.