கோவையில் திடீர் கடையடைப்பு: மக்கள் அவதி!

கோவையில் திடீர் கடையடைப்பு: மக்கள் அவதி!

கோவை, 03.05.20:
ரங்கே கவுடர் வீதியில் மொத்த வியாபாரிகள் இன்று ஒரு நாள் மட்டும் கடையடைப்பு நடத்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கோவை ரங்கே கவுடர் வீதியில் மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இதே போல் தியாகி குமரன் மார்க்கெட் பகுதியிலும் கடைகள் உள்ளன.
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், தங்கள் வாகனங்களை தேர்முட்டி வீதியில் நிறுத்த வேண்டும். பின்னர், வரிசைப்படி நான்கு, நான்கு வாகனங்களாக ரங்கே கவுடர் வீதியில் அனுமதிக்கப்படும். இந்த புதிய திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமையும் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் ரங்கேகவுடர் வீதி, டி.கே.மார்க்கெட் பகுதிகளில் கடைகள் மூடப்படும் என்றும், சமையல் எண்ணெய் கடைகளும் மூடி இருக்கும் என்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து, கடைகளை அடைத்தனர். இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.