கொரோனா நிவாரணம் கொடுத்தது சவுராஷ்டிரா சமூகம்!

கொரோனா நிவாரணம் கொடுத்தது சவுராஷ்டிரா சமூகம்!

புதுக்கோட்டை, 02.05.20:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சவுராஷ்ட்ரா சமூக சங்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர்கள் கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்புக்காக கடந்த மார்ச் 25 முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாட அரசு தடை விதித்துள்ள நிலையில், பலரும் முன்வந்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

அறந்தாங்கியில் உள்ள சவுராஷ்ட்ரா சமூக சங்க நிர்வாகிகள் முன்வந்து சங்க உறுப்பினர்களுக்குள் நிதி திரட்டி அதன் மூலம் காய்கறிகள், அரிசியை 150க்கும் அதிகமான குடும்பத்தினருக்கு வழங்கினர்.

இதில் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ராசு, பத்ரிநாத் சீனிவாசன், அனந்தராமன், ரவிக்குமார், டாக்டர் சரவணன், சுப்ரமணியன், ஜெகன், சீனிவாசன், பாலாஜி, செல்வம், சேகர்  ஆகியோர் வந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.