ஊரடங்கில் முடங்கிய அறந்தாங்கியில் கொரோனா நிவாரணம்!

ஊரடங்கில் முடங்கிய அறந்தாங்கியில் கொரோனா நிவாரணம்!

புதுக்கோட்டை, 01.05.20:
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால் கூலித்தொழிலாளர்கள் உட்பட எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தவிர அரசியல் கட்சிகள், சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்தில்,100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பாஜகவினர் வழங்கினர்.

மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவர் கவிதாஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய தலைவர் கருணா, ஒன்றிய பொருப்பாளர் நாகராஜன் முன்னிலையில் அரிசி, காய்கறிகள் மற்றும்
மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அப்போது, முன்னாள் நகர தலைவர் வி.ரெங்கையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எபி.ஜெயபாண்டியன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மெ.வடிவேலன்,
எஸ்.கணேசன், கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயகுமார், துணைத்தலைவர் சி.கண்ணன், மகளிர் அணி மீனாட்சிசுந்தரம் மாவட்ட இளைஞரணி. செயலாளர் எஸ்.பராசரண், இளைஞரணி தலைவர் எல்.சதீஸ்குமார், எஸ்.சக்திகுமரன், நகரசெயலாளர் டி.கார்த்திக்ஸ்ரீ, எஸ்.கார்த்திகேயன், பா.முத்து, கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராம்கிரிஷ்,
என்.கார்த்திகேயன், பா.ராஜேஷ்வர்மன், மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் உடன் வந்திருந்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்கள்.