சாலைக்கு வழி விட்டு இடம் பெயரும் சிவபெருமான்!

சாலைக்கு வழி விட்டு இடம் பெயரும் சிவபெருமான்!

விழுப்புரம், 28.02.20:
சாலை விரிவாக்கப் பணிக்காக, சிவன் கோவில் ஒன்று 1000 ஜாக்கிகளின் உதவியுடன் இடமாற்றம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரைச்சாலையை, 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்து அதற்கான இடம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மரக்காணம் அருகே செட்டி நகர் பகுதியில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில், சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் உள்ளது தெரிந்தது.
இதையடுத்து, அந்தக் கோவிலை அப்படியே 60 மீட்டர் தூரத்துக்கு பின்னோக்கி இழுத்து அமைக்க கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

இந்தப் பணியில், மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் 40க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, கோகிலைச் சுற்றிலும் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தில், 1000 நவீன ஜாக்கிகள் பொருத்தி கோவிலை பின்னோக்கி நகர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை கிராம மக்களும், கோவில் நிர்வாகக் குழுவினரும் நேரில் கண்காணித்து வருகின்றனர்.