பல்கலை வாள்வீச்சில் சாதித்த மன்னா் கல்லூரி மாணவிகள்: 15 தங்கம் வென்று அசத்தல்!

பல்கலை வாள்வீச்சில் சாதித்த மன்னா் கல்லூரி மாணவிகள்: 15 தங்கம் வென்று அசத்தல்!

மதுரை, 22.02.20:
மதுரை காமராஜா் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற வாள் வீச்சுப் போட்டியில், மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி மாணவிகள் 15 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்றனர்.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையே வாள் வீச்சுப் போட்டி நடந்தது. பெண்கள் பிரிவில் மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி சாா்பில் 17 மாணவிகள் பங்கேற்றனா். இதில், குழு போட்டியில் 12 தங்கப் பதக்கம் வென்றனா்.

எப்பி பிரிவில் நடந்த போட்டியில் மாணவி அபிதா தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். சேபா் பிரிவில் மாணவி சைனி ரூபினா ஜெமீமா தங்கப் பதக்கமும், மாணவி அகிலா வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

பாயில் பிரிவில் மாணவி விஷ்ணு பிரியா தங்கப் பதக்கம் பெற்றாா்.

பதக்கம் வென்ற மாணவிகளை கல்லூரி தலைவா் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளா் கோவிந்தராஜன், முதல்வா் மனோகரன், இயக்குனர் அழகுசுந்தரம், உடற்கல்வி இயக்குனர்கள் ராகவன், கோவிந்தம்மாள் ஆகியோா் பாராட்டினா்.

இந்த சாதனையை மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடி, சாதனையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.