தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் பட்டினி!

தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் பட்டினி!

சென்னை, 06.02.20:
மகப்பேறு நிதியுதவி திட்டத்தை எளிமையாக்க வலியுறுத்துவது, தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்புக்கூட வழங்காமல் கிராம சுகாதார செவிலியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை கண்டிப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடங்களில் நடந்தது. இதில், ஏராளமான செவிலியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ராமநாதபுரத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க ராமநாதபுரம் சுகாதார மாவட்ட தலைவர் விமலா தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதார மாவட்ட தலைவர் சியா முன்னிலை வகித்தார். இதில், இரண்டு சுகாதார மாவட்டங்களையும் சேர்ந்த செவிலியர்கள் திரளாக பங்கேற்றனர்.