பொள்ளாச்சி அருகே ரேக்ளா ரேஸ்: வீரிய காளைகள் கண்டு வியந்து ரசித்த மக்கள்!

பொள்ளாச்சி அருகே ரேக்ளா ரேஸ்: வீரிய காளைகள் கண்டு வியந்து ரசித்த மக்கள்!

பொள்ளாச்சி, 02.02.20:
பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் கிராமத்தில் ஊர் மக்கள் சார்பில் ரேக்ளா போட்டி இன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் 300க்கும் அதிகமான நாட்டு இன காளைகள் பங்கேற்றன.

அழிந்து வரும் நாட்டு இன காங்கேயம் காளைகளை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தில், வண்டியில் பூட்டிய காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து சென்றது கண்டு இருபுறமும் இருந்த பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர்.
200 மீட்டர், 300 மீட்டர் தொலைவு அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் குறைந்த நேரத்தில் நிர்ணயத்த இடத்தை தொட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

இந்த உற்சாக பந்தயத்தை மக்கள் குதூகலித்து வரவேற்று ரசித்தனர்.