செல்ல நாயை காத்த டாக்டர்களை கவுரவிக்க 42 கோடி அள்ளிக்கொடுத்த நன்றியின் நாயகன்!

செல்ல நாயை காத்த டாக்டர்களை கவுரவிக்க 42 கோடி அள்ளிக்கொடுத்த நன்றியின் நாயகன்!

வாஷிங்டன், 01.02.20:
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்றிய டாக்டர்களை கவுரவிக்க ரூ.42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டு அசத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபலமான கார் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வெதர்டெக். இதன் முதன்மை நிர்வாக அதிகாரி டேவிட் மேக்நெய்ல். இவர், ‘ரெட்ரீவர்’ ரக நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகிறார்.
அந்த நாய்க்கு இதயத்தில் கட்டி மற்றும் ரத்தக் குழாய்களில் புற்று நோய் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த டேவிட், உடனடியாக தன் செல்ல நாயை விஸ்கன்ஸின் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

டாக்டர்களின் தீவிர முயற்சிக்குப் பின்னர் அந்த நாய் பூரண நலம் பெற்றது.
தன் பிரியத்துக்குரிய நாய் பூரண நலம் பெற்றதால் மகிழ்ச்சியடைந்த டேவிட் மெக்நெய்ல், அதன் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்களை கவுரவிக்க பெரிதும் விரும்பினார்.

இதையடுத்து, சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டியில், நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 42 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இது, கால் பந்தாட்ட வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அத்துடன், தன் வளர்ப்பு நாய் மீது டேவிட் மேக்நெயல் வைத்துள்ள அன்பு, அனைவரையும் நெகிழ்ச்சியுடன் வியப்படைய வைத்துள்ளது.