தமிழக மீனவா் படகில் தங்ககட்டிகள்: நடுக்கடலில் பிடித்தது இலங்கை!

தமிழக மீனவா் படகில் தங்ககட்டிகள்: நடுக்கடலில் பிடித்தது இலங்கை!

இலங்கை/புத்தளம், 31.01.20:
படகில் தங்கம் கடத்தியதாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பகுதியில் உள்ள குதிரைமலை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினா் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு படகை மடக்கி சோதனையிட்டனா்.
அந்தப்படகில் 4.200 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் 48 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை கைப்பற்றிய இலங்கை கடற்படையினா், படகில் வந்த 4 பேரிடம் விசாரித்தனர். அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையைச் சோ்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இதையடுத்து, அந்த 4 பேரையும் விசாரணைக்காக கல்பிட்டி கடற்படை விசாரணை மையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு விசாரணை நடந்து வருகிறது.

பிடிபட்டவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.