சாதனை சைக்கிள் பயணம் நிறைவு: காஷ்மீர் தொட்ட குமரி வாலிபருக்கு உற்சாக வரவேற்பு!

சாதனை சைக்கிள் பயணம் நிறைவு: காஷ்மீர் தொட்ட குமரி வாலிபருக்கு உற்சாக வரவேற்பு!

கன்னியாகுமரி, 28.01.20:
தமிழகத்தின் மற்றும் கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்து திரும்பிய இளைஞருக்கு, குமரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதஜ் விஜயன் (31). முதுகலை அறிவியல் பட்டதாரியான இவர், சுயதொழில் செய்து வருகிறார்.

இவர், தமிழகத்தின் உணவு மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி, ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்த பயணத்தை கன்னியாகுமரி மாவட்ட ஊா்க்காவல் படை அதிகாரி மைதிலி சுந்தரம் கொடியசைத்து கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி வைத்தாா்.

மொத்தம் 4,000 கி.மீ. தொலைவு சைக்கிளில் பயணம் செய்து காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்த ஸ்ரீதஜ், அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு நேற்று (27ம் தேதி) வந்து சேர்ந்தார்.
அவருக்கு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பயணம் தொடங்கிய போது