மசூதிகளில் பட்டொளி வீசிப்பறந்த தேசியக்கொடி: கேரளாவில் குடியரசு விழா கோலாகலம்

மசூதிகளில் பட்டொளி வீசிப்பறந்த தேசியக்கொடி: கேரளாவில் குடியரசு விழா கோலாகலம்

திருவனந்தபுரம், 27.01.20:
கேரள மாநிலத்தி ல் உள்ள மசூதிகளில் முதன் முறையாக, தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு எல்லா மசூதிகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதுடன், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என, முஸ்லிம் ஜமா-அத்களுக்கு கேரள மாநில வக்பு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியது.

இதையடுத்து, இந்தியாவின் 71வது குடியரசு தினமான நேற்று (26ம் தேதி), கேரள மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளில் முதன் முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஏராளமான தேச பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

கேரளாவில் தேசிய சிந்தனையை முன்னிறுத்தி, மசூதிகளில் நடந்த இந்த குடியரசு தின விழா கொண்டாட்டம் கண்டு எல்லா தரப்பு மக்களும் மகிழ்ந்து வீர வணக்கம் செலுத்தினர்.