இலங்கையில் மீண்டும் கரும்புலி!

இலங்கையில் மீண்டும் கரும்புலி!

கொழும்பு, 21.01.20:
இலங்கையில், முற்றிலும் அழிந்ததாக கருதப்பட்ட கரும்புலி இன்னமும் உயிரோடிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையின் சிவனொளிபாத மலை அருகே உள்ள ரிக்காடன் வனப்பகுதியில் கரும்புலி நடமாட்டம் உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வனத்துறை கால்நடை டாக்டர்கள் மலகா அபேவர்தன மற்றும் மனோஜ் அகலங்க ஆகியோர், ரிக்காடன் வனப்பகுதியில் ‘ரிமோட் மோஷன் சென்ஸார்’ கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கரும்புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கருப்புலி கேமராவில் சிக்குவது இதுவே முதல் முறை. கண்டறியப்பட்ட கரும்புலி, 6 அடி நீளம் மற்றும் 3 அடி உயரம் கொண்டதாக காணப்பட்டது என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலைப்பகுதி மக்கள் கரும்புலியை நேரில் கண்டுள்ளதால் அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால், இலங்கையின் அழிந்துபோன இனமாக கருதப்பட்ட கரும்புலி இன்னமும் வாழ்வதாக தெரிய வந்திருப்பது, ஒரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.