குலதெய்வ கோவில்களில் ஓம் சக்திகள் வழிபாடு

குலதெய்வ கோவில்களில் ஓம் சக்திகள் வழிபாடு

சாயல்குடி, 20.01.20:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையணிந்துள்ள பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம், தனியன்கூட்டம் கிராமத்தில் பெண்கள் பலரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் யாத்திரைக்காக மாலையணிந்து விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்த கிராம மக்களின் குலதெய்வங்களான வில்வநாத சுவாமி, நொண்டிக்கருப்பண்ண சுவாமி, பேச்சியம்மன், அங்காள பரமேஸ்வரி ஆகிய கோவில்களில் விசேஷ வழிபாடு நடத்தினர்.