ஸ்ரீஅங்காள ஈஸ்வரிக்கு விசேஷ திருவிளக்கு வழிபாடு

ஸ்ரீஅங்காள ஈஸ்வரிக்கு விசேஷ திருவிளக்கு வழிபாடு

முதுகுளத்தூர், 11.12.19
அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் கார்த்திகை பவுர்ணமி திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரண்மனை முன்பு எழுந்தருளியுள்ளது அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்.

அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
இந்நிலையில், ஆப்பநாட்டின் 448 கிராமங்களுக்குச் சொந்தமான இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அம்மாளுக்கு திருவிளக்கு பூஜையுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடத்த, கோவில் நிர்வாகம் (முக்குலத்தோர் உறவின்முறை சங்கம்) முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, கார்த்திகை பவுர்ணமி தினமான இன்று முதல் திருவிளக்கு வழிபாடு விமரிசையாக நடந்தது. பெண்கள் திரளாக பங்கேற்று திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிபட்டனர். எல்லாருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த வழிபாட்டு ஏற்பாடுகளை முக்குலத்தோர் உறவின்முறை சங்க தலைவர் இலக்கியா பிரஸ் தட்சிணாமூர்த்தி, செயலாளர் கந்தன், பொருளாளர் பூ.சுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் ஆரைகுடி சுப்பிரமணி, எஸ்.கீரந்தை இ.கருப்பையா, செயலாளர் எஸ்.வில்வலிங்கம், பொருளாளர் ஆசிரியர் சுந்தரராஜ், மூத்த உறுப்பினர்கள் மூக்கையூர் ராமர்த்தேவர், கிராம நிர்வாக அதிகாரி சாத்தங்குடி எஸ்.வில்வலிங்கம், மின் வாரிய அதிகாரிகள் மாங்குடி குமரய்யா, பிள்ளையார்குளம் மூர்த்தி, பொசுக்குடி சுப்பிரமணியன் மற்றும் எம்.கரிசல்குளம் கணேஷ் மலையாண்டி, சங்க கணக்கர் பொங்கல் செல்வத்தேவர் உட்பட பலர் செய்திருந்தனர்.