இந்திய படைகளால் கொல்லப்பட்ட அப்பாவிகள் நினைவு தினம்!

இந்திய படைகளால் கொல்லப்பட்ட அப்பாவிகள் நினைவு தினம்!

யாழ்ப்பாணம், 23.10.19:
மருத்துவமனைக்குள் புகுந்து இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 68 அப்பாவிகளின் 32வது ஆண்டு நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி, புகுந்த இந்தியப் படையினர், மருத்துவமனையை இரண்டு நாட்களாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

அப்போது இந்தியப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 டாக்டர்கள், 2 செவிலியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளிகள் என மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி கொல்லப்பட்ட 68 அப்பாவிகளின் 32வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், மருத்துவமனை இயக்குனர் தலைமையில் 21ம் தேதி நடைபெற்றது.

இதில், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ சேவையாளர்கள் உட்பட வைத்தியசாலை பணியாளர்கள் கலந்துகொண்டு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலித்தினர்.