நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு

நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த பொது குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அவருக்கு அக்கட்சியின் சார்பில் மீனாட்சி அம்மன் சிலை, ஜல்லிக்கட்டு காளை ஆகியவற்றுக்கான உருவ படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, சமூகத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்பு பெறுவதற்காக 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் சில தமிழக கட்சிகள் எதிர்மறையாக பேசி வருகின்றன. தவறாக சித்தரிக்க முயல்கின்றன. சில சுயநல சக்திகள் இதனை எதிர்க்கின்றன. இதுபற்றி தவறான கருத்தினை பரப்புகின்றனர்.