இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா

மொத்தம் ரூ.2½ கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்தது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேக்வால், உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5–ல் சாய்னாவும், 6–ல் மரினும் வெற்றி பெற்றுள்ளனர் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் தன் கட்டுப்பாட்டிற்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டார் கரோலினா. சாய்னாவின் தவறுகளையும் புள்ளிகளாக்கிய அவர் 10-3 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். பின்னர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக கரோலினா அறிவித்தார். இதனையடுத்து சாய்னா நேக்வால் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.